About the Press

Palm Leaf Press publishes works that aspire to re-imagine social, political and intellectual transformation in South Asia. We center voices from the margins that pay attention to the concerns of working people across the dynamics of caste, class and gender. By challenging the hierarchies between thought and practice, our aim is to make available the rich and diverse cultures of knowledge to non-English speaking reading publics. Firmly committed to grounded research and open access publishing, our publications bring to light primary materials, pedagogical resources and critical histories in vernacular languages.


தெற்காசியாவில் சமூகம், அரசியல் மற்றும் அறிவுசார் மாற்றங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் படைப்புகளை பாம் லீஃப் பிரஸ் (Palm Leaf Press) வெளியிடும். சாதி, வர்க்க, பாலின பாகுபாடுகளினூடே, உழைக்கும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட, விளிம்புநிலைக் குரல்களை முன்நிறுத்த தொடர்ந்து முயற்சிப்போம். உழைப்பிற்கும், சிந்தனைக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளைக் கேள்விக்குள்ளாக்கி, பலவிதமான சிந்தனை மற்றும் செயல் மரபுகளை, தெற்காசிய மொழிகளில் வாசகர்களுக்குக் கொண்டு செல்வது எங்கள் நோக்கம். வரலாற்றுத் தரவுகள், கற்றல் பணிக்கான ஆதாரங்கள் மற்றும் திறனாய்வுகளை தெற்காசிய மொழிகளில் எந்தத் தடையுமின்றி, அறிவுச் சொத்துடமைக்கு உட்படாமல், அனைவரும் பயன்படுத்தும் வகையில் எங்கள் பதிப்புகள் இருக்கும்.